உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிணவறையில் விபத்து அபாயம்

பிணவறையில் விபத்து அபாயம்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அரசு மருத்துவமனையின் பிணவறையில் கூரையின் பூச்சு உதிர்ந்து விபத்து அபாயம் உள்ளது. இங்கு பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு மருத்துவமனை உள்ளது. இதன் பிணவறை கட்டடம் வலிமையிழந்து கூரையில் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் தெரிகின்றன. அச்சமயத்தில் பணியாளர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சுவர்களில் மழை நீர் கசிந்து ஓதம் ஏற்பட்டுள்ளது. விபரீதம் விளையும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை