உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தேசிய போட்டியில் கல்வி பள்ளி மாணவர்கள் சாதனை

தேசிய போட்டியில் கல்வி பள்ளி மாணவர்கள் சாதனை

சோழவந்தான்: சோழவந்தான் அருகே நகரி கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., தேசிய டேக்வாண்டோ போட்டியில் இரட்டை வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். உ.பி., அம்னிவ் விஷன் பள்ளியில் சி.பி.எஸ்.இ., தேசிய டேக்வாண்டோ- 2025 போட்டி நடந்தது. நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 10 மாணவர்கள் பங்கேற்றனர். 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அருண்குமார், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அபினேஷ் வென்று வெண்கலம் வென்றனர். தேசிய அளவில் நடந்த போட்டியில் தமிழ்நாட்டில் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மட்டுமே 2 பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது. மாணவர்களை பள்ளித் தலைவர் செந்தில்குமார், பயிற்சியாளர் மனோஜ் பிரபாகரன், விளையாட்டு மேலாளர் சரவண பாலாஜி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !