உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மேலுார் மாணவர்கள் சாதனை

 மேலுார் மாணவர்கள் சாதனை

மேலுார்: மேலுாரில் சிலம்பம் இளைஞர் விளையாட்டு சங்கம் சார்பில் நடந்த மாவட்ட சிலம்பாட்ட போட்டியை போதிதர்மா தற்காப்பு கலை பயிற்சி பள்ளி நடத்தியது. இப் போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் போதிதர்மா தற்காப்பு கலை பயிற்சி பள்ளி மாணவர்கள் 155 பேர் 77 தங்கம், 49 வெள்ளி, 29 வெண்கல பதக்கங்களையும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றனர். வென்ற மாணவர்களை தலைமை பயிற்சியாளர் செந்தில் போஜராஜன், பயிற்சியாளர்கள் ஜெயக்குமார், பாலமுருகன், சுவேதா, லத்திகா விஜயகலா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !