உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

மதுரை: பயணிகள் வசதிக்காக கீழ்க்காணும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அக்.,31 வரை செங்கோட்டை - தாம்பரம் (20682), நாகர்கோவில் - தாம்பரம் (22658), நவ.,1 வரை தாம்பரம் - செங்கோட்டை (20681), தாம்பரம் - நாகர்கோவில் (22657) ஆகிய ரயில்களில் ஒரு 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், ஒரு பொதுப் பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகின்றன. அக்.,28 வரை ராமேஸ்வரம் - கோவை (16617), அக்., 29 வரை கோவை - ராமேஸ்வரம் (16618) ஆகிய ரயில்களில் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படுகின்றன. நிரந்தர இணைப்பு பனாரஸ் - ராமேஸ்வரம் - பனாரஸ் ரயில்களில் (22536/22535), ஒரு 'ஏசி' முதல் வகுப்பு பெட்டி, ஒரு 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டி ஆக.,31 முதல் நிரந்தரமாக இணைக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !