உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மீனாட்சி கோயிலில் கூடுதல் வசதிகள்: வி.எச்.பி., வலியுறுத்தல்

மீனாட்சி கோயிலில் கூடுதல் வசதிகள்: வி.எச்.பி., வலியுறுத்தல்

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவையொட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் குடிநீர், நடமாடும் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில துணை பொதுச்செயலாளர் சந்திரசேகரன் கூறினார்.அவர் கூறியதாவது: சித்திரைத்திருவிழா ஏப்.29ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சித்திரை வீதிகளில் பந்தல் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். குடிநீர், நடமாடும் கழிப்பறை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுக்கு சிறப்பு கவுன்டர்களை அமைக்க வேண்டும்.மீனாட்சி அம்மன் கோயில் செல்லும் அனைத்து வழிகளிலும் ரோடுகள் சீரமைக்க வேண்டும். மீனாட்சி அம்மன் கோயில் வீர வசந்த ராயர் மண்டபத்தை புனரமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். கள்ளழகர் இறங்கும் இடம் உட்பட வைகை ஆற்றை கருவேல மரங்களை அகற்றி சுத்தப்படுத்தி பக்தர்கள் நின்று கள்ளழகரை தரிசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தினசரி பக்தர்கள் தற்போது அனுமதிக்கப்படுவதால் அங்கு தேவையான மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அறநிலையத்துறை செய்து கொடுக்க வேண்டும். சுந்தரமகாலிங்கம் கோயிலில் மருத்துவ வசதிகளை செய்யகோரி வி.எச்.பி., சார்பில் விரைவில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ