மேலும் செய்திகள்
அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
17-Oct-2024
வாடிப்பட்டி, : வாடிப்பட்டி நீரேத்தான், மேட்டு நீரேத்தான் கிராம ஆதி அய்யனார், சோனை சுவாமி கோயில் புரட்டாசி திருவிழா துவங்கியது.கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சந்தன காப்பு அலங்காரத்தில் அய்யனார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.நேற்று மாலை சுவாமி பெட்டிக்கு மாலைகள், பட்டு வஸ்திரம் சாத்தி பூஜை வழிபாடு நடந்தது. பெட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.யூனியன் ஆபீஸ் பிரிவில் சிறுவாலையிலிருந்து தாதம்பட்டிக்கு வரும் ஆதி அந்தியம்மாள் பெட்டி சந்திப்புக்கு பின் கிராம மக்களுடன் பெட்டி கோயிலை அடைந்தது. இரவு புரவி எடுப்பு மற்றும் முளைப்பாரி வைத்து பெண்கள் கும்மி பாட்டு பாடி வழிபட்டனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
17-Oct-2024