உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆதி அய்யனார் கோயில் விழா நடத்த அனுமதி

ஆதி அய்யனார் கோயில் விழா நடத்த அனுமதி

வாடிப்பட்டி, : வாடிப்பட்டி நீரேத்தான், மேட்டு நீரேத்தான் கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட ஆதி அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி கடைசி வெள்ளிக்கிழமையில் பெட்டி எடுப்பு, பொங்கல் வைத்து வழிபாடும், சனிக்கிழமை எருது கட்டு விழா நடப்பது வழக்கம். இவ்விழாவில் கிராம மரியாதை செலுத்துவது தொடர்பாக இரு கிராமத்தினர் இடையே பிரச்னை எழுந்தது. தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் மீண்டும் அமைதி பேச்சு வார்த்தை நடந்தது. இதில் இரு கிராமத்தினரும் சுமூகமாக விழா நடத்த ஒப்புக்கொண்டனர். இதைதொடர்ந்து திருவிழா நடத்த தாசில்தார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ