உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பசை இல்லாத அணிகளில் பதவிக்கு வர நிர்வாகிகள் தயங்குறாங்க... மதுரை நகர் தி.மு.க.,வுக்கு இப்படியும் ஒரு சோதனையா

பசை இல்லாத அணிகளில் பதவிக்கு வர நிர்வாகிகள் தயங்குறாங்க... மதுரை நகர் தி.மு.க.,வுக்கு இப்படியும் ஒரு சோதனையா

மதுரை: மதுரை தி.மு.க.,வில் இளைஞரணி, மாணவரணி உள்ளிட்ட சில அணிகள் தவிர 'பசை' இல்லாத அணிகளுக்கு நிர்வாகிகள் நியமிப்பதில் 'சோதனை' ஏற்பட்டுள்ளது.தி.மு.க.,வில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, பொறியாளர், ஆதிதிராவிடர், இலக்கிய, விவாசய, விவசாய தொழிலாளர், விளையாட்டு மேம்பாட்டு, மருத்துவர் என 23 அணிகள் உள்ளன. தற்போது பகுதி, ஒன்றியம் வாரியாக இந்த அணிகளுக்கான நிர்வாகிகள் நியமனம் மேற்கொள்ள கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.இதில் இளைஞரணி இளைஞரணி, மாணவரணி என 'பசை'யுள்ள அணிகளுக்கு போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் விவசாய, விவசாய தொழிலாளர் என 10க்கும் மேற்பட்ட முக்கியத்துவம் இல்லாத அணிகளுக்கு நிர்வாகிகள் பதவிக்கு வர கட்சியினர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் நகரில் மத்தி, வடக்கு, மேற்கு, தெற்கு சட்டசபை தொகுதிகளில் முழு அளவில் அணிகளுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தி.மு.க., வினர் கூறியதாவது: பகுதிவாரியாக அணி நிர்வாகிகள் நியமனம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஆனால் விஜயின் த.வெ.கா., தாக்கத்தை அடுத்து தொண்டர்கள் அக்கட்சிக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக அணி நிர்வாகிகள் பதவிகளை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இளைஞரணி உள்ளிட்ட சில அணிகளின் பதவிகள்தான் கட்சிக்குள் கவனம் பெறுகின்றன. பிற அணிகளில் பதவி பெற்றும் பயன் இருக்காது.இதனால் வட்டச் செயலாளர்களால் (வ.செ.,) தான் அதுபோன்ற அணிகள் பதவிகளுக்கு ஆட்களை கொண்டுவரச் செய்து பதவி நிரப்பப்படும். ஆனால் நகர் தி.மு.க.,வில் வ.செ.,க்கள் பலர் கடும் அதிருப்தியில் உள்ளனர். 'பெரும்பாலான வார்டுகளில் வ.செ.,க்களை கவுன்சிலர்கள் மதிப்பதில்லை' என அவர்களுக்குள் 'பனிப்போர்' நீடிக்கிறது.ஆனால் மாவட்ட நிர்வாகிகள் எவ்வித விசாரணையோ, சமாதானமோ மேற்கொள்ளவில்லை. இதனால் இந்த அணிகளில் பதவிக்கு கட்சியினரை கொண்டுவர வ.செ.,க்களுக்கும் ஆர்வம் இல்லை. கட்சியில் 'வ.செ.,க்களுக்கே இந்த நிலை என்றால் 'பசை' இல்லாத சாதாரண அணிகளில் பதவி பெற்று என்ன பயன்' என்ற நிலைக்கு கட்சியினர் வந்துள்ளனர். வ.செ., - கவுன்சிலருக்கு இடையே நிலவும் 'பனிப்போரை' முடிவுக்கு கொண்டுவர நகர் செயலாளர் தளபதி தீர்வுகாண வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை