ஏ.டி.எம்.கே., -இ.டி.எம்.கே.,வானது தினகரன் கிண்டல்
சோழவந்தான்: ''கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொறிந்து கொண்டது போல் செங்கோட்டையனை அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கி உள்ளார். அந்த தகுதிக்கூட பழனிசாமிக்கு இல்லை. ஏ.டி.எம்.கே., இன்று இ.டி.எம்.கே.,வாக உள்ளது'' என அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் கூறினார். மதுரை மாவட்டம் சோழவந்தானில் அவர் மேலும் கூறியதாவது: நாங்கள் மூவரும் சந்தித்ததை அரசியல் நிகழ்வாக பார்க்கவில்லை. 'துரோகத்தை வீழ்த்துவதற்கு மூவரும் ஒன்றாக இணைந்திருக்கிறோம்' என்றுதான் செங்கோட்டையன் சொன்னார். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கங்காரு குட்டியை மடியில் கட்டிப்பிடித்து இருப்பது போல பதவியை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறார். குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல தற்போது கட்சியை சின்னாபின்னமாக்கி வருகிறார். தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுக்கிறார். ஹிட்லர் போன்று சர்வாதிகார மனப்பான்மையில் உள்ளார். மற்றவர்களை பார்த்து துரோகி எனக்கூறும் தகுதிகூட அவருக்கு இல்லை. கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொறிந்து கொண்டது போல் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி உள்ளார். எங்களை நேரில் சந்திக்கும் தைரியம் கூட அவருக்கு கிடையாது. எங்களோடு ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டுதேவர் குருபூஜைக்கு வந்ததால்செங்கோட்டையனைகட்சியில் இருந்து நீக்கிய துரோகத்தின் உருவம் பழனிசாமிக்கு தென்மாவட்ட மக்கள் நிச்சயம் தேர்தலில் பதில் அளிப்பார்கள்.மிகப்பெரிய தோல்வியை அவர்சந்திப்பார். எங்களை 'பி' டீம்என்று சொல்லும் பழனிசாமிதான் 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வர காரணமானவர். இந்த தேர்தலில் அவரின் துரோகம் வீழ்த்தப்படும். கோடநாடு கொலை வழக்கை பற்றி பேசினாலே அவர்பதறுகிறார். அவரை வீழ்த்த நாங்கள் ஜனநாயக முறைப்படி எடுக்கப் போகும் ஆயுதத்தை பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு கூறினார்.