உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மக்காச்சோளத்தில் படைப்புழு கட்டுப்படுத்த ஆலோசனை

மக்காச்சோளத்தில் படைப்புழு கட்டுப்படுத்த ஆலோசனை

பேரையூர்: 'டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு பாதிப்பை கட்டுப்படுத்த வேளாண் துணை இயக்குனர் விமலா யோசனை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: இப்பகுதியில் பயிரிட்டுள்ள மக்காச்சோளம் பயிரில் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை எருவுடன் கலந்து துாவ வேண்டும். அதிக அளவு தழைச்சத்து இடுவதை தவிர்க்க வேண்டும். வயலைச் சுற்றிலும் வரப்பு ஓரங்களில் தட்டைப்பயறு, எள், சூரியகாந்தி, துவரை, தீவனச் சோளம் என ஏதாவது ஒன்றை பயிர் செய்யலாம். ஏக்கருக்கு ஐந்து எண்கள் வீதம் இனக்கவர்ச்சி பொறியை வயலில் வைக்க வேண்டும். இதன் மூலம் ஆண் அந்துப் பூச்சிகளை அளிக்கலாம். பதினைந்து முதல் 20 நாள் பயிரில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கு புளுபென்டமைட் 480 எஸ்.சி. 0.5 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம். 35 -- 40 நாள் பயிரில் நொவளுரான் மருந்தை உபயோகித்தும் கட்டுப்படுத்தலாம். 60 நாள் பயிரில் கதிர் உருவாகும் சமயத்தில் ஸ்பினிடோரம் மருந்தை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை