உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆம்புலன்சை தடுக்கும் ஆக்கிரமிப்பு வாகனங்கள்: அவசர நோயாளிகளுக்கு பாதிப்பு

ஆம்புலன்சை தடுக்கும் ஆக்கிரமிப்பு வாகனங்கள்: அவசர நோயாளிகளுக்கு பாதிப்பு

மேலுார்: மேலுார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையத்திற்கு செல்லும் வழியில் வாகனங்களை நிறுத்துவதால் நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் தாமதமாகிறது. மேலுார் தாலுகா மருத்துவமனையில் கடந்தாண்டு ரூ.9.23 கோடியில் ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை மையம் கட்டப்பட்டது. தினமும் 1200க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், நுாற்றுக் கணக்கான உள் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். நான்கு வழிச்சாலையிலோ, முப்பது கி.மீ., க்குள் உள்ள கிராமங்களிலோ விபத்தில் பாதித்தோர், அவசர சிகிச்சை பெற இங்கு வருகின்றனர். அவர்களை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் இம் மருத்துவமனைக்கு வரும்போது, அவசர சிகிச்சை மையத்திற்கான வழியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அவற்றை அப்புறப்படுத்தி ஆம்புலன்சை நகர்த்தி செல்வதற்குள் தாமதமாகிறது. சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: உயிருக்கு ஆபத்தாக வருவோரை காப்பாற்ற விரைந்து வரும் ஆம்புலன்ஸ் செல்வதற்கு அவசர சிகிச்சை மையத்தின் ஒரு பகுதியில் சாய்தளம் உள்ளது. இந்த வழியில் வாகனத்தை நிறுத்தி நெருக்கடியை ஏற்படுத்துகின்றனர். இதனால் நோயாளிக்கு உயிர் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் வாகனங்கள் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நோயாளியை பாதுகாக்க முடியும், என்றனர். மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் கலாமணி கூறுகையில், ‘‘அவசர சிகிச்சை மையம் முன்பு ‘நோ பார்க்கிங்’ போர்டு வைத்துள்ளோம். வாகனம் நிறுத்துவோரை தடுத்தால் காவலாளியுடன் வாக்குவாதம் செய்கின்றனர். நிதியின்மையால் வேறு இடத்தில் டூவீலர் பார்க்கிங் அமைக்க தாமதமாகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி