உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையில் ஏ.ஐ., அறிமுகம்

மதுரையில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையில் ஏ.ஐ., அறிமுகம்

மதுரை: மதுரை டாக்டர் மாதவன் ஹார்ட் சென்டர் சார்பில் நடந்த ஆஞ்சியோபிளாஸ்டி 25ம் ஆண்டு விழாவில், ஏ.ஐ., அதிநவீன இதய சிகிச்சை கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மாதவன் கூறியதாவது: ஆஞ்சியோபிளாஸ்டி கண்டுபிடித்த சார்லஸ் டாட்டர் பிறந்தநாளில் இவ்விழா நடக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரையில் இவ்வகை சிகிச்சை இல்லை. முதன்முதலில் இங்கு துவங்கிய போது மருத்துவர்களுக்கும் அதுபற்றிய புரிதல் இல்லை.மதுரை டாக்டர் சீனிவாசனுக்குதான் முதலில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையை துவக்கினோம். பின்னர் அவசர சிகிச்சை முறையில் ஆஞ்சியோ பிளாஸ்டி, கேமரா மூலம் பார்க்கும் தொழில்நுட்பம், இன்ட்ரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட், ஓ.சி.டி., மாதிரியான தொழில்நுட்பங்களை பயன்படுத்த துவங்கினோம். தற்போது தமிழகத்தில் முதல் முறையாக ஏ.ஐ., உதவியுடன் இயங்கும் அதிநவீன கருவிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.விலையை பற்றி கவலைப்படாமல், முன்கூட்டியே திட்டமிட்டு அறிமுகப்படுத்தியுள்ளோம். முதன்முதலில் ஆஞ்சியோ பிளாஸ்டியை துவக்கிய போது தென்மாவட்டங்களில் 2 பேர்தான் இருந்தோம். தற்போது 500க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் இருக்கின்றனர். இன்னும் சிறுநகரங்கள், கிராமங்களுக்கும் இத்தொழில்நுட்பம் செல்ல வேண்டிய தேவை உள்ளது.மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் இதய பாதிப்புக்கு அவசர சிகிச்சை வசதி அமைந்துள்ளது போல், காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்திலும் அமைக்க உள்ளோம் என்றார். முன்னதாக ஏ.ஐ., அதிநவீன இதய சிகிச்சை கருவிகளை டாக்டர்கள் செல்வராஜ், சுப்ரமணியன், ரவிஷங்கர் திறந்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !