உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அ.தி.மு.க., ஆலோசனை

அ.தி.மு.க., ஆலோசனை

பாலமேடு: வலையபட்டியில் அலங்காநல்லுார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 9 பேர் கொண்ட புதிய கிளை அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் ஆலோசனை வழங்கி பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மகேந்திரன், மாணிக்கம், கருப்பையா முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் திருப்பதி, ராமகிருஷ்ணன், ராஜேஷ் கண்ணா, தன்ராஜன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தி.மு.க.,வில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். கட்சியினருக்கு வேஷ்டி, அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி