உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மனு

 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மனு

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட சந்தை திடலில் கடைகளை அகற்றி வணிக வளாகம் கட்டக்கோரி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பூமாராஜா தலைமையில் கமிஷனர் இளவரசனிடம் மனு அளித்தனர். அதில், நவ. 14ல் நடந்த அவசர கூட்டத்தில் வாடகை ஒப்பந்தம் செய்ய தற்போது கடை வைத்துள்ளவர்களுக்கே வாடகைக்கு விட தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதை நிறுத்தி வைக்கவும், 6 ஏக்கர் 85 சென்டில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி புதிய வணிக வளாகம் கட்டவும் ஏகமனதாக தெரிவித்திருந்தோம்.அதன்படி நடவடிக்கை எடுத்து, நகராட்சி வணிக வளாகங்கள், தினசரி, நவதானிய, காய்கறி, கமிஷன் மண்டி, பூ மார்க்கெட், வாகன காப்பகம், நவீன சுகாதார வளாகங்கள் கட்டி மேற்படி நகராட்சி நிதிநிலை உயர்த்தவும், உசிலம்பட்டியை அழகிய நகராட்சியாக மாற்றவும் நடவடிக்கை வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை