உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சட்டம் ஒழுங்கு வெள்ளை அறிக்கை வெளியிட அ.தி.மு.க., வலியுறுத்தல்

சட்டம் ஒழுங்கு வெள்ளை அறிக்கை வெளியிட அ.தி.மு.க., வலியுறுத்தல்

மதுரை; ''தி.மு.க., ஆட்சியில் 4 ஆண்டுகள் சட்டம் ஒழுங்கு குறித்து வெள்ளை அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கூறினார். மதுரையில் அவர் கூறியதாவது:தமிழகத்தில் 1.20 லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் உள்ள நிலையில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு எதிராக பாலியல் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த 4 ஆண்டுகளில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொலைகள், 57 ஆயிரத்திற்கு மேற்பட்ட கொள்ளைகள் நடந்துள்ளன. இதை தி.மு.க., அரசு தடுக்க தவறியுள்ளது. ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மது விற்பனையை இலக்காக வைத்து செயல்படுவதால் இளைஞர்கள் அதிகளவில் போதைக்கு அடிமையாகி உள்ளனர். 2022ல் கோவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் முதல் தொடர்ச்சியாக பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் சீண்டல் அதிகரித்துள்ளன. ஆனாலும் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள நாடாக தமிழகம் உள்ளது என்று ஸ்டாலின் கூறுகிறார்.தற்போது கூட ஏ.டி.ஜி.பி., கல்பனா நாயக் தன்னை கொலை முயற்சி நடந்ததாக கூறுகிறார். சாதாரண மக்கள் முதல் போலீஸ் உயர் அதிகாரி வரை பாதுகாப்பு இல்லாத நாடாக தமிழகம் மாறிவிட்டது. நான்கு ஆண்டுகள் சட்டம் ஒழுங்கு குறித்து வெள்ளை அறிக்கையை ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை