உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முறைகேடு செய்த மாநகராட்சி மண்டல தலைவர்களை கைது செய்ய வேண்டும் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் செல்லுார் ராஜூ வலியுறுத்தல்

முறைகேடு செய்த மாநகராட்சி மண்டல தலைவர்களை கைது செய்ய வேண்டும் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் செல்லுார் ராஜூ வலியுறுத்தல்

மதுரை : மதுரை மாநகராட்சியில் முறைகேட்டில் ஈடுபட்ட தி.மு.க., மண்டல தலைவர்களை பதவியில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீக்கியது எங்களுக்கு கிடைத்த வெற்றி. அதேநேரம் அவர்களை கைது செய்யும் வரை அ.தி.மு.க., போராட்டம் நடத்தும் என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்தார்.மாநகராட்சி முறைகேட்டை கண்டித்து மதுரை பெத்தானியாபுரத்தில் அ.தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலை ராஜா தலைமை வகித்தார்.செல்லுார் ராஜூ பேசியதாவது: தமிழகத்திலேயே ஒரு மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களையும் ராஜினாமா செய்ய உத்தரவிட்டது, மதுரையில் தான். இது அ.தி.மு.க. அறிவித்த ஆர்ப்பாட்டத்திற்கு கிடைத்த வெற்றி. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த சிவபெருமான், வேலை செய்யவில்லை என அவரை மன்னனே பிரம்பால் அடித்த வரலாறு உண்டு. தி.மு.க.,வில் மண்டல தலைவர்கள், வட்டச் செயலாளர்கள், கவுன்சிலர்கள் அனைவரும் குறுநில மன்னர் போல செயல்படுகின்றனர். மாநகராட்சியில் வணிக நிறுவனங்களுக்கு குடியிருப்பு வரி நிர்ணயித்துள்ளனர். கவுன்சில் கூட்டத்தில் அ.தி.மு.க., தொடர்ந்து கேள்வி எழுப்பியது.இரண்டு அமைச்சர்கள் மதுரையில் இருந்தும் இந்த தவறு நடந்துள்ளது. குறிப்பாக அமைச்சர்தியாகராஜன் தொகுதியில் மண்டல தலைவர், கவுன்சிலர்கள் தவறு செய்துள்ளனர். மாநகராட்சி வரி முறைகேட்டில் மூளையாக செயல்பட்டவர் கம்ப்யூட்டர் பிரிவில்பணியாற்றிய ரவி. போலீஸ் விசாரணை என தெரிந்தவுடன் அவர் ஒரே இரவில் ஆளுங்கட்சி அரவணைப்பில் ராமேஸ்வரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.பணக்காரர்கள் வீடு கட்ட மாமூல் கொடுத்து சரி கட்டி விடுகிறார்கள். ஆனால் ஏழைகளிடம் கமிஷன் கேட்கிறார்கள்.வீட்டு முகவரி மாற்ற ரூ. 100 போதும். ஆனால் ரூ.15ஆயிரம் வரை லஞ்சம் கேட்கின்றனர். பாதாள சாக்கடை இணைப்புக்கு ரூ. 70 ஆயிரம் லஞ்சம் கேட்கின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டுவருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தமண்டல தலைவர்கள் யாராக இருந்தாலும்அவர்களை கைது செய்து, அவர்கள் சொத்தை மீட்டு மக்களுக்கு வழங்க வேண்டும்.இதுதொடர்பான போலீஸ் விசாரணையில் எந்த குறுக்கீடும் செய்ய கூடாது. விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் என்றால் முதல்வர் ஸ்டாலின் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை அ.தி.மு.க., போராடும். இவ்வாறு பேசினார்.தி.மு.க., மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்ததால் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க.,வினருக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ