பஞ்சாங்கம் வெளியீடு
மதுரை : தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஊமச்சிக்குளம் கிளை சார்பில் ஸ்ரீவிசுவாவசு வருட பஞ்சாங்கம் வெளியீட்டு விழா தலைவர் வெங்கடாஜலபதி தலைமையில் நடந்தது. மாநில மூத்த உப தலைவர் இல.அமுதன் வெளியிட கவுரவ ஆலோசகர் சுப்பராயன் பெற்றார். இதில் மாநில துணைப் பொதுச் செயலாளர் பக்தவச்சலம், துணைத் தலைவர் மனோகரன், மகளிரணி தலைவர் கவுசிகா, பொருளாளர் சுரேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.