பஞ்சாங்கம் வெளியீடு
மதுரை : தமிழ்நாடு பிராமணர் சங்க ஜெய்ஹிந்த்புரம் கிளை சார்பில் ஸ்ரீவிசுவாவசு ஆண்டு பஞ்சாங்க வெளியீட்டு விழா கிளைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. மாநில மூத்த துணைத் தலைவர் அமுதன் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். கிளைத் தலைவர் பஞ்சாங்கத்தை வெளியிட பொருளாளர் நாராயணன் பெற்றார். கிளை பொருளாளர் சுப்ரமணியன், துணைத் தலைவர் ஜெகநாதன், மகளிர் அணி செயலாளர் ராஜம்மீனாட்சி, ஆலோசகர்கள் வெங்கட்ராமன், கல்யாணி, மகளிர் அணி இணைச் செயலாளர்கள் உமா, சித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.