முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழு
சோழவந்தான்: சோழவந்தான் அருகே விவேகானந்தா கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. 1971 ல் இருந்து படித்த 250 மாணவர்கள் பங்கேற்றனர். துணைச் செயலர் சாய் சுகுமாரன் வரவேற்றார். தலைவர் சத்யநாராயணன் தலைமை வகித்தார். திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன துணைத் தலைவர் சுவாமி நியமானந்த முன்னிலை வகித்தார். கல்லுாரிச் செயலாளர் சுவாமி வேதானந்த, குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆசி வழங்கினர். சங்கச் செயலர் தீனதயாளன் ஆண்டறிக்கையையும், பொருளாளர் பட்டினத்தார் நிதி அறிக்கையையும் சமர்ப்பித்தனர். கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன், துணை முதல்வர் சந்திரசேகரன் உட்பட பலர் பேசினர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சங்கத்தின் செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்து முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடினர். உதவிப் பொருளாளர் செந்தில் வேலவன் நன்றி கூறினார். செயற்குழு உறுப்பினர்கள் குமரேசன், வடிவேல்ராஜா, அருள்மாறன், அலுவலகப் பணியாளர் கார்த்திகேயன் ஒருங்கிணைத்தனர்.