முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மதுரை: திருவாதவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்த முன்னாள் மாணவர்கள் 16 ஆண்டுகளுக்கு பின் சந்தித்தனர். பள்ளி நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர். சந்திப்பின் நினைவாக பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தலைமை ஆசிரியர் தண்ணாயிரமூர்த்தி, முன்னாள் தலைமை ஆசிரியர் நாச்சியப்பன், மேலுார் கல்வி மாவட்ட அலுவலர் இந்திரா, ஆசிரியர்கள் ஜான்சிராணி, விஜயகுமார், சங்கரலிங்கம், நிஷா, பிச்சையம்மாள், கிருஷ்ணமூர்த்தி, ஜான் விக்டர், ஜான் ஜெயசீலன், நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளிக்கு தேவையானவற்றை செய்ய 'வாட்ஸ் ஆப்' குழு உருவாக்கப்பட்டது.