டில்லி சென்றார் அமித்ஷா
அவனியாபுரம்,: மதுரையில் நேற்று நடந்த பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மாலை 6:15 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தார். மாலை 6:30 மணிக்கு தனி விமானம் மூலம் அவர் டில்லி புறப்பட்டார்.கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதன், மத்திய இணை அமைச்சர் முருகன், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் அவரை வழியனுப்பினர்.