உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ராமேஸ்வரம் வரை அமிர்தா ரயில்

ராமேஸ்வரம் வரை அமிர்தா ரயில்

மதுரை: திருவனந்தபுரம் - மதுரை இடையே தினசரி இயக்கப்படும் 'அமிர்தா' ரயில், இன்று முதல் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்யப் படுகிறது. இன்று (அக். 16) முதல், இரவு 8:30 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து புறப்படும் அமிர்தா ரயில் (16343), மறுநாள் மதியம் 12:45 மணிக்கு ராமேஸ்வரம் செல்கிறது. மறுமார்க்கத்தில் அக். 17 முதல் மதியம் 1:30 மணிக்கு ராமேஸ்வரத்தில் புறப்படும் ரயில் (16344), மறுநாள் அதிகாலை 4:55 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்கிறது. நேரம்: ரயில் (16343), காலை 8:35 திண்டுக்கல், 9:50 மதுரை, 10:25 மானாமதுரை, 10:50 பரமக்குடி, 11:13 ராம நாதபுரம் வந்து செல்லும். மறுமார்க்கத்தில் ரயில் (16344), மதியம் 2:13 ராமநாதபுரம், 2:38 பரமக்குடி, 3:05 மானாமதுரை, மாலை 4:05 மதுரை, 5:05 மணிக்கு திண்டுக்கல் வந்து செல்லும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி