உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கள்ளழகர் சூடிக்கொள்ள ஆண்டாள் மாலை மதுரை கொண்டு செல்லப்பட்டது

கள்ளழகர் சூடிக்கொள்ள ஆண்டாள் மாலை மதுரை கொண்டு செல்லப்பட்டது

ஸ்ரீவில்லிபுத்துார்:மதுரை சித்திரை திருவிழாவில் நாளை வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் சூடிக்கொள்ள ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடி களைந்த மாலை, கிளி, பட்டு, மங்கலப் பொருட்கள் நேற்று ஆண்டாள் கோயிலில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது.இதனை முன்னிட்டு நேற்று மதியம் 3:00 மணிக்கு வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் மாலை, கிளி, பட்டு, மங்கல பொருட்களை ஒரு கூடையில் வைத்து ஸ்தானிகம் ஹயக்ரிவாஸ் தலைமையில் கோயில் மாட வீதிகள் சுற்றி வந்து மதுரை கொண்டு செல்லப்பட்டது. செல்லும் வழியில் பல இடங்களில் ஆண்டாள் மாலைக்கு பக்தர்கள் வரவேற்பளித்தனர்.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட் ராமராஜா, செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர்.இன்று இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலை மாலை சென்றடைகிறது. அங்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இதனையடுத்து நாளை காலை ஆண்டாள் சூடி களைந்த மாலையை அணிந்து கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை