உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இடியும் கட்டடத்தில் அங்கன்வாடி மையம்

இடியும் கட்டடத்தில் அங்கன்வாடி மையம்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் நரியம்பட்டியில் இடியும் நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.அப்பகுதி கழுவன்: அங்கன்வாடி கட்டடம் நல்ல நிலையில் இருந்தும் புதிய கட்டடம் கட்டுவதாக கூறி 2 ஆண்டுகளுக்கு முன் இடித்தனர்.இதனால் சமுதாயக் கூடத்தில் செயல்பட்டு வருகிறது. இதுவும் இடியும் நிலையில் உள்ளது.கூரையில் தண்ணீர் கசிகிறது. எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. கட்டடத்தை சுற்றி குப்பை, சாக்கடை கழிவு நிறைந்துள்ளது. இதனால் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும் வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !