உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இடநெருக்கடியில் அங்கன்வாடி குழந்தைகள்

இடநெருக்கடியில் அங்கன்வாடி குழந்தைகள்

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் தனிச்சியம் ஊராட்சி செம்புக்குடிபட்டியில் இட நெருக்கடியான அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். இங்குள்ள கிராம மந்தையில் 2019ல் ரூ.8.70 லட்சத்தில் கட்டப்பட்ட கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இதில் 5 ஆண்டுகளாக 35 முதல் 40க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் மையம் செயல்பட்டு வருகிறது. இதனால் போதி இடம், காற்றோட்டம், ஓடி விளையாட இடவசதி இல்லை. குழந்தைகளை சாப்பிட துாங்க வைக்க சிரமப்படுகின்றனர். ஓடி விளையாட வேண்டிய குழந்தைகள் ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இம்மையத்திற்கு நிரந்தர உதவியாளரும் இல்லை. குழந்தைகளை துாங்க வைக்கும் போது கழிப்பறை வரை படுக்க வைக்கும் நிலை உள்ளது. இதனால் சுகாதாரம் பாதிக்கிறது. இதுபோன்ற மையத்தில் 20 குழந்தைகள் வரைதான் பயில்வார்கள். எனவே குழந்தைகள் பாதுகாப்பு வசதி கருதி கூடுதலாக மையம் ஏற்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி