உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேகம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீ சக்ரத்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ராஜசியாமளா மகாவராஹி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. மூலவர்கள் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, லலிதா சகஸ்ர நாம பாராயணம், ஸ்ரீ லலிதா, சியாமளா, மகா வராஹி மூல மந்திர ஹோமங்கள், தீபாராதனை முடிந்து மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகமாகி அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ