மேலும் செய்திகள்
சேதமான சமுதாயக் கூடம்
10-Jul-2025
மதுரை: மதுரை மாநகராட்சி மண்டலம் 3க்கு உட்பட்ட 54வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் நுார்ஜஹான், தனது வார்டில் சமுதாயக் கூடம் அமைக்க வேண்டும் என கவுன்சில் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தார். கமிஷனர் சித்ரா உத்தரவுபடி ஆய்வு செய்ததில் அதே வார்டின் தெற்கு வெளிவீதி குப்புப்பிள்ளை தோப்பு 2வது தெருவில் 1991ல் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் தனிநபர் கட்டுப்பாட்டில் இருந்ததும் தெரியவந்தது. அதை மீட்ட அதிகாரிகள் 'மாநகராட்சி சமுதாயக்கூடம்' என பேனர் வைத்தனர். அதை நேற்று தனிநபர் தரப்பில் கிழித்து உள்ளே சென்றனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், சம்பந்தப்பட்டோரை எச்சரித்து சமுதாயக்கூடத்திற்கு 'சீல்' வைத்தனர். மீண்டும் பேனர் வைத்தனர்.
10-Jul-2025