உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு

ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு

மதுரை: மதுரை ரயில்வே கோட்டத்தில் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ரயில்வேயில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை செயல்படுகிறது. இத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் அக்., மாதத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அக். 28 முதல் நவ. 3 வரை 'ஊழல் தடுப்பு விழிப்புணர்வு' வாரம் அனுசரிக்கப்படுகிறது. நேற்று (அக். 28) கோட்ட அலுவலகத்தில்நடந்த முதல் நாள் நிகழ்வில் கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா தலைமை வகித்தார். அதிகாரிகள், ஊழியர்கள் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு, ஒருமைப்பாடு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் ராவ், வேக சக்தி முதன்மை திட்டம் மேலாளர் ஹரிக்குமார், கோட்ட ஊழியர் நல அதிகாரி சங்கரன் பங்கேற்றனர்.மதுரை கோட்டத்தில் உள்ள முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள், ரயில் பெட்டி பராமரிப்பு பணிமனைகள் ஆகியவற்றில் உள்ள ரயில்வே ஊழியர்களும் ஊழல் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை