உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பா.ஜ., நிர்வாகிக்கு முன்ஜாமின்

பா.ஜ., நிர்வாகிக்கு முன்ஜாமின்

மதுரை: மதுரை மாவட்ட வி.சி.க., அமைப்பாளர் சரவணக்கனி. இவர் பா.ஜ.,வுக்கு எதிராக மதுரையில் அக்.13 ல் நடந்த ஆர்ப்பார்ட்டத்தில் பேசினார். இவருக்கு அலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாக பா.ஜ., மாவட்டச் செயலாளர் வீரமுத்து மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வீரமுத்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ்.குமார் ஆஜரானார். நீதிபதி முன்ஜாமின் அனுமதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை