உள்ளூர் செய்திகள்

பாராட்டு விழா

திருப்பரங்குன்றம்: மதுரை ஹார்விபட்டி புரட்சிமணி 45. வடை மாஸ்டரான இவர், 84 முறை அரசு மருத்துவமனை ரத்த வங்கி, வசதியற்ற நோயாளிகளுக்கு இவர் ரத்தம் தானமாக வழங்கி உள்ளார். அவருக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் நடந்த விழாவில் புரட்சிமணிக்கு பாராட்டு விழா நடந்தது. தலைவர் அய்யல்ராஜ் தவைமை வகித்தார். துணைத் தலைவர் காளிதாசன், பொருளாளர் அண்ணாமலை, நிர்வாகிகள் செல்வராஜ், அரவிந்தன், பாஸ்கர்பாண்டி, லட்சுமணன், சங்கரய்யா கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம் நினைவு பரிசு, அன்பளிப்பு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை