மாணவர்களுக்கு பாராட்டு
திருப்பரங்குன்றம் : மதுரையில் நடந்த முதல்வர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி அணி 2ம் இடம் பெற்றது. நாக் அவுட் முறையில் நடந்த இப்போட்டிகளில் 36 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் வக்பு போர்டு கல்லுாரி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி அணியை வென்றது. 2ம் இடம் பெற்ற மாணவர்களை தலைவர் விஜயராகவன், கவுரவத் தலைவர் ராஜகோபால், உப தலைவர் ஜெயராமன், செயலாளர் ஸ்ரீதர், உதவி செயலாளர் சுரேந்திரன், பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா, உடற்கல்வி இயக்குனர் ராகவன் பாராட்டினர்.