மாணவர்களுக்கு பாராட்டு
மதுரை: புதுடில்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மதுரை தியாகராஜர் கல்லுாரி மாணவர் கீதைப்பிரியன், சென்னை குடியரசு தின அணிவகுப்பில் மாணவர் பிரகதீஷ் பங்கேற்றனர். அவர்களை கல்லுாரி முதல்வர் பாண்டியராஜா பாராட்டினார். மதுரை காமராஜ் பல்கலை சார்பில் அணிவகுப்பில் தலைவராக பங்கேற்ற பேராசிரியர் முருகன் கவுரவிக்கப்பட்டார். பேராசிரியர்கள் சரவணஜோதி, கோவிந்தராஜ், அன்பரசி, செல்வகுமார் வாழ்த்தினர்.