மாணவருக்கு பாராட்டு
சோழவந்தான் : சோழவந்தான் அருகே நகரி கல்வி இன்டர்கான்டினென்டல் பள்ளி, கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் பாடத்திட்டத்துடன் செயல்படும் இப்பள்ளியின் 7ம் வகுப்பு மாணவர் தர்ஷன் 'டூஓலிங்கோ' ஆங்கிலத் தேர்வில் தேர்ச்சி பெற்று 'சி1' நிலை அடைந்துள்ளார்.இத்தேர்வில் 160க்கு 140 மதிப்பெண்கள் பெற்று தர்ஷன் தனது ஆங்கில திறமை, மொழி கற்றலுக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மாணவர்களின் மொழி திறனை மேம்படுத்தும் பள்ளியின் முயற்சியை பிரதிபலிக்கும் விதமாக சாதனை படைத்த மாணவரை பள்ளித் தலைவர் செந்தில்குமார், முதல்வர் அருணா, பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் பாராட்டினர்.