மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
27-Jan-2025
திருப்பரங்குன்றம்: அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் 30வது மாநில மாணவர் மாநாடு '2047 நிறைவான மாற்றத்திற்கான மாணவர் மாநாடு' என்ற தலைப்பில் மதுரை சவுராஷ்டிரா கல்லூரியில் நடந்தது. ஏ.பி.வி.பி., தேசிய துணைத் தலைவர் நாகலிங்கம் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். நாகாலாந்து என்.ஐ.டி. இயக்குனர் இளையபெருமாள் பேசியதாவது: ஒரு மனிதனின் வாழ்க்கை பூர்த்தி அடைய வேண்டுமானால் கல்வி, பொருளாதாரம், சமூக சேவை, உடல்நலம் இன்றியமையாதது. இவற்றை ஒவ்வொருவரும் பேணிக் காக்க வேண்டும் என்றார். 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தாண்டிற்கான மாநில தலைவராக கன்னியாகுமரி பேராசிரியர் சவிதா, செயலாளராக திருநெல்வேலி சூர்யா தேர்வு செய்யப்பட்டனர். மாநில இணை செயலாளர் விஜயராகவன் நன்றி கூறினார்.
27-Jan-2025