மேலும் செய்திகள்
மாணிக்கவாசகர் சிலையை விற்க முயன்ற 2 பேர் கைது
13-Oct-2025
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. தாசில்தார் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உசிலம்பட்டி பஸ் ஸ்டாண்ட் எப்போது திறக்கப்படும் என மா.கம்யூ., விவசாயி ராமர் கேட்டதற்கு, 'பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்காக தடையாக இருந்த மரங்களை வெட்ட விடாமல் நீங்கள் தான் தடுக்கிறீர்கள். அப்பகுதியில் கடை வைத்துள்ளவர்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். இதனால் மரங்கள் வெட்ட முடியாமல் கிளைகளை மட்டும் அகற்றும் பணி நடக்கிறது. பிரச்னைகளை நீங்கள் தான் உருவாக்குகிறீர்கள். நீங்களே இங்கு வந்து தீர்வு வேண்டும் என கேள்வி எழுப்புகிறீர்கள்' என்றார். இதற்கு பதிலளித்த ராமர் 'அதிகாரம் உங்கள் கையில் தானே உள்ளது' என்றார். கோபமடைந்த தாசில்தார், 'அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக தலையை எடுக்க முடியுமா, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. தீர்ப்பு வந்ததும் பணிகள் துவங்கும்' என்றார்.
13-Oct-2025