உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தயிர் மார்க்கெட் கடைகள் ஒதுக்கீட்டில் வாக்குவாதம்

தயிர் மார்க்கெட் கடைகள் ஒதுக்கீட்டில் வாக்குவாதம்

மதுரை: மதுரை கீழமாரட் வீதி தயிர் மார்க்கெட் கடைகளை ஒதுக்கீடு செய்யும் பணி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடந்தது. மார்க்கெட்டில் பழைய கடைகள் இடிக்கப்பட்டு புதிதாக 84 கடைகள் கட்டப்பட்டன. இதில் பழைய கடைகள் நடத்திய 42 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிற கடைகளுக்கு இடெண்டர் மூலம் கடை ஒதுக்கும் முடிவு தொடர்பாக வியாபாரிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதையடுத்து குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்வதாக தகவல் வெளியானது. கருத்துவேறுபாடுள்ள இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகண்ட பின் ஒதுக்கீடு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அதிகாரிகளிடம் போலீசார் தெரிவித்து கூட்டத்தை அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி