உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சங்க ஆண்டு விழா

சங்க ஆண்டு விழா

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் மதுரை -விருதுநகர் மாவட்ட ரெட்டி நலச்சங்கம் மற்றும் கல்வி பொது நல அறக்கட்டளை சார்பாக 5ம் ஆண்டு ரெட்டியார் மணமாலை சங்க அறக்கட்டளை செயலி துவக்க விழா நடந்தது. நிர்வாக இயக்குனர் தலைவர் பாலகுரு தலைமை வகித்தார். செயலாளர் ராமநாதன்,மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் ரவிச்சந்திரன், வட்டார தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் பாலாஜி வரவேற்றார். சங்க மாவட்ட தலைவர் ராஜா பூர்ண சந்திரன் செயலியை துவக்கி வைத்தார். வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி மணமாலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். வட்டார செயலாளர் சீதாராமன், அறக்கட்டளை பொருளாளர் பாலகிருஷ்ணன் பேசினர். தகவல் மைய பொறுப்பாளர் பாண்டியராஜ், வட்டார பொருளாளர் ராமகிருஷ்ணன் ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ