உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா

மதுரை,: மதுரை பொன்முகம் அறக்கட்டளை சார்பில் காந்திய பணி செம்மல் விருது வழங்கும் நிகழ்வு விழா காந்தி மியூசியத்தில் நடந்தது. நிறுவனத் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். ஸ்டேட் வங்கி மேலாளர் ஓய்வு ஆறுமுக பாண்டியன் முன்னிலை வகித்தார். மியூசிய செயலாளர் நந்தாராவ், பொருளாளர் செந்தில்குமார், கல்வி அலுவலர் நடராஜன், காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. காந்தி நினைவு நிதி செயலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ