விருது வழங்கும் விழா
வாடிப்பட்டி, : பாண்டியராஜபுரம் அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம், திண்டுக்கல் மாவட்ட யூ.எஸ்.ஐ.பி.,மனித உரிமைகள் அணி சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விருது வழங்கும் விழா நடந்தது. கொடைக்கானல் நகர மனித உரிமைகள் அணி தலை வர் அமல்ராஜ் தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ராமராஜ் முன்னிலை வகித்தார். தலைவர் லட்ச்சர்கான் வரவேற்றார். ஆசிரியர்கள் ராஜா, கஸ்துாரிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது, சான்றிதழ் வழங்கப்பட்டது. துணைத் தலைவர் செந்தாமரை கண்ணன் நன்றி கூறினார்.