உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு விருது

மாணவர்களுக்கு விருது

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டார இந்து நாடார்கள் உறவின் முறை சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த தின விழா, அரசு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு விருது வழங்கல், பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. தலைவர் வேட்டையார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் காசிராஜன், சுடலைமணி முன்னிலை வகித்தனர். செயலாளர் அருணாசலம் வரவேற்றார். காமராஜர் படத்தை தொழிலதிபர் கார்த்திகேயன் திறந்து வைத்தார். மடீட்சியா முன்னாள் தலைவர் மணிமாறன், ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி திருமலை குமார், ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன் பேசினர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு செல்வமணி பாலாஜி, உலகராஜா விருது வழங்கினர். 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ