உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டாக்டர்கள், பணியாளர்களுக்கு விருது

டாக்டர்கள், பணியாளர்களுக்கு விருது

மதுரை: மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த குடியரசு தினவிழாவில் சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநர் டாக்டர் செல்வராஜிற்கு கலெக்டர் சங்கீதா விருது வழங்கினார்.அரசு மருத்துவமனை டாக்டர்கள் ரவிச்சந்திரன், பார்த்திபன், பத்மநாபன், சரவணன், சரவணகுமார், ரமேஷ், சுந்தரி, நிர்வாக அலுவலர் தர்மராஜ், பார்மசிஸ்ட் பாண்டியன் அறிவுடைநம்பி, கண்காணிப்பாளர்கள் உமாபதி, வெங்கடேஸ்வர், நர்ஸ்கள் சசிகலா ராணி, பிரியா, ஜெயபாண்டிக்கு விருது வழங்கப்பட்டது. டீன் அருள் சுந்தரேஷ்குமார் பாராட்டினார்.கால்நடை உதவி டாக்டர் ஜெயகோபி, ஆய்வாளர் செந்தில்வேல், பராமரிப்பு உதவியாளர் தமிழ்ச்செல்வன், அமைச்சுப் பணியாளர் முன்னமலை, டிரைவர் சுப்பையா ஆகியோருக்கு சிறந்த பணியாளருக்கான விருது வழங்கப்பட்டது. மண்டல இணை இயக்குநர் சுப்பையன், திருமங்கலம், மதுரை பன்முக மருத்துவமனை உதவி இயக்குநர்கள் சரவணன், என்.ஆர். சரவணன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ