மேலும் செய்திகள்
திருநங்கைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு
18-Oct-2024
கொட்டாம்பட்டி : மேலுார் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்பணர்வு முகாம் நடந்தது.மேலுார் சார்பு நீதிமன்ற நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா, நீதிமன்றத்தில் இருந்து குற்ற வழக்கு அல்லது பிரச்னை வரும் போது கையாளும் விதம், போலீசார் கைது செய்ய வரும் போது தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள், போக்சோ சட்டம், புகார் கொடுக்க விரும்புவோர், சட்ட பணிக்குழுவுக்கு புகாரை நேரடியாக, மனுவாக அனுப்புவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தாசில்தார் செந்தாமரை, எஸ்.ஐ., கவிதா, வழக்கறிஞர்கள் ஜோதிமணி, துரைபாண்டி, ராஜராஜன், பார்த்திபன், பூமிநாதன் பங்கேற்றனர்.
18-Oct-2024