உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே சாணம்பட்டியில் மண்டல கதர், கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தில் தோல் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. மதுரை மண்டல இயக்குனர் செந்தில்குமார் ராமசாமி காணொலியில் துவக்கி வைத்தார். மண்புழு உர உற்பத்தியாளர்கள் பழனிச்சாமி, சிவசாமி முன்னிலை வகித்தனர். நிர்வாக அதிகாரி மணவாளன் வரவேற்றார். உதவி இயக்குனர் செந்தில்குமார், பி.டி.ஓ., சதீஷ்குமார் பேசினர். காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணைய திட்டங்கள், பயிற்சி திட்டங்கள், இளைஞர்கள், பெண்கள் திறன்களை பயன்படுத்தி சுய தொழில் துவங்கும் வாய்ப்புகள், தோல் பொருட்கள் பயிற்சி விவரங்கள், அரசின் திட்ட பயிற்சி கடன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு வாய்ப்புகள் விளக்கப்பட்டன. பயனாளிகளுடன் கலந்துரையாடல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை