விழிப்புணர்வு முகாம்
சோழவந்தான்: தேனுாரில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணர்வு முகாம் நடந்தது. கன்றுகள் பேரணி நடத்தி, சிறந்த கிடேரிக் கன்று, சிறந்த முறையில் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உதவி இயக்குனர் மருத்துவர் ஜான்சுரேஷ் தாசன் பரிசு வழங்கினார். உதவி மருத்துவர் தாரணி கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தார். குடற்புழு, ஆண்மை நீக்கம், சினைப் பரிசோதனை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வாளர்கள் முருகையன், சுகப்பிரியா, அருண் கருவூட்டல் பணிகளைச் செய்தனர். உதவியாளர்கள் விஜயலட்சுமி,ஜெயாதேவி உதவிப் பணிகளை செய்தனர்.