மேலும் செய்திகள்
பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க விழிப்புணர்வு
10-Oct-2024
சோழவந்தான் : சோழவந்தான் பகுதிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான தீபாவளிக்கு தீத்தடுப்பு நடவடிக்கை குறித்து தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.தீயணைப்பு நிலைய அலுவலர் தவுலத் பாதுஷா தலைமையில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி பிரசாரம் செய்தனர்.ராயபுரம் ஆர்.சி., நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து விளக்கினர்.சோழவந்தான் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்ஸ்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களூக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
10-Oct-2024