விழிப்புணர்வு மாரத்தான்
மதுரை: மதுரையில் மாவட்ட நிர்வாகம், மாநில எய்ட்ஸ் காட்டுப்பாட்டு சங்கம் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற எச்.ஐ.வி., எய்ட்ஸ் விழிப்புணர்வு ‘ரெட் ரன்’ மாரத்தான் ஓட்டம் நடந்தது. ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இருந்து கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா துவக்கி வைத்தார். மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன், அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் சரவணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மேற்பார்வையாளர் ஜெயபாண்டி கலந்து கொண்டனர்.