விழிப்புணர்வு நாடகம்
திருப்பரங்குன்றம் : மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குழு, கேன் கிட்ஸ் அமைப்பு, நகர் போலீசார் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு நாடகம் நடந்தது. கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் தொடங்கி வைத்தார். கல்லுாரி டீன் சிலம்பரசன் வரவேற்றார். கேன் கிட்ஸ் ருக்மணி முன்னிலை வகித்தார். 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு நாடகத்தில் பங்கேற்றனர். என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் வெங்கடேஷ் ஒருங்கிணைத்தார்.