மேலும் செய்திகள்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு
27-Jun-2025
மதுரை: மதுரை விரகனுார் ரிங்ரோட்டில் இருந்து கே.எல்.என்., கல்லுாரி வரை மாணவர்கள் பங்கேற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.சிலைமான் போலீஸ் ஸ்டேஷன், கே.எல்.என்.பாலிடெக்னிக் கல்லுாரி, கே.எல்.என்.வித்யாலயா பள்ளி சார்பில், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி இந்த ஊர்வலம் நடந்தது. மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்தனர். போதைத் தடுப்பின் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லுாரி நிர்வாகக் குழு உறுப்பினர் முரளிதரன், கல்லுாரி முதல்வர் ஆனந்தன், துணை முதல்வர் சகாதேவன், போலீஸ் டி.எஸ்.பி., பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வம். எஸ்.ஐ., மணிமாறன், முருகேசன் பங்கேற்றனர். உடற்கல்வி இயக்குநர் சகாதேவன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சிவக்குமார் ஏற்பாடு செய்திருந்தனர்.
27-Jun-2025