விழிப்புணர்வு ஊர்வலம்
உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் வன உயிரின பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்து வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வனச்சரகர் அன்னக்கொடி, வனவர்கள் வீமராஜா, காமராஜ், வனக்குழு நிர்வாகிகள், தன்னார்வலர்கள், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லுாரி இயற்கை வள பாதுகாப்பு குழு மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். விழிப்புணர்வு பதாதைகளை ஏந்திய வண்ணமும், வன உயிரினங்கள் கடக்கும் சாலையில் மெதுவாக செல்லவும், வைகை ஆற்றை பாதுகாக்க கோரியும் வலியுறுத்தினர்.