உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மண்வளம் பாதுகாக்க விழிப்புணர்வு: பல்கலை மாநாட்டில் வலியுறுத்தல்

 மண்வளம் பாதுகாக்க விழிப்புணர்வு: பல்கலை மாநாட்டில் வலியுறுத்தல்

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் இந்திய மைக்ரோபயாலஜிஸ்ட் சொசைட்டி சார்பில் 'நிலையான விவசாயம், மருத்துவம், மனித நோய்களுக்கு எதிரான மூலக்கூறுகள்' தொடர்பான சர்வதேச இரண்டு நாட்கள் மாநாடு நடந்தது. உயர் அறிவியல் புலத் தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார். திருவாரூர் மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் துவக்கி வைத்து பேசுகையில், அறிவியல் தொழில்நுட்பங்களை கிராமங்களுக்கு எளிதாக கொண்டுசெல்லும் ஆய்வுகள் அதிகரிக்க வேண்டும். கிராமங்கள் பயன்பட வேண்டும் என்றார். மாநாட்டின் ஒருங்கிணைப்பு செயலாளர் சண்முகையா, பல்வேறு துறைகளில் சிறப்பு பெற்ற பேராசிரியர்களுக்கு விருது வழங்கி பேசுகையில், வேதியியல் உரங்களால் விவசாய மண் அமிலத்தன்மையாகிறது. அங்கு நோய் உருவாக்கும் கிருமிகள் அதிகரித்து மண்வளத்தை பாதிக்கின்றன. இதற்கு தீர்வாக உயிரி நுண்ணுயிர்கள் மூலம் கிடைக்கும் உரங்களை பயன்படுத்தும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். என்றார். பேராசிரியர்கள் குமரேசன், கருத்தப்பாண்டி, தாஜூதீன், மதிவாணன் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ